தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

சின்னசேலம் :  சின்னசேலம் பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு வாகன தணிக்கையின் போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து சின்னசேலம், வடக்கநந்தல் பேரூராட்சி பகுதிகளில் மண்டல அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல நேற்று காலை சின்னசேலம் மண்டல துணை வட்டாட்சியர் சசிகலா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். இந்த வாகன சோதனை தேர்தல் வரை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை  சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டிவனம்  நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சவுந்தர்ராஜன் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் உதவி  அலுவலர்கள் மோகன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்கு  உட்பட்ட ஏமப்பேர் ரவுண்டானா பகுதி, கச்சிராயபாளையம் செல்லும் சாலை, அம்மன் நகர் பகுதி, சங்கராபுரம் செல்லும் சாலை கோட்டைமேடு பகுதி ஆகிய  முக்கிய சாலை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஆறுமுகம் தலைமையில்  சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், தலைமை காவலர்கள் கண்ணன், சுதா ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனங்களை நிறுத்தி விதிமுறை மீறி பணம் மற்றும்  பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு  மேற்கொண்டனர்.

Related Stories: