ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28, 29ல் வேலை நிறுத்தம்: தொமுச அறிவிப்பு

சென்னை:தொமுச பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி சிறு, குறு நடுத்தரத்  தொழில்கள் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.  அமைப்புசாரா தொழிலாளர்களின்  நலன் பாதுகாக்க சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித  முனைப்பும் காட்டுவதில்லை போன்ற பிரச்னைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்க  அமைப்புகள் மற்றும் வங்கி, இன்சூரன்ஸ், இதர தொழிற்சங்க கூட்டமைப்பு  இணைந்து அறிவித்த 2 நாள் பொதுவேலை நிறுத்தம் பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்  மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை  நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.  தொமுச பேரவை நிர்வாகிகள். மாவட்ட  கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள்  வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: