உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங். மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலாவை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது. இதையடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகிறார். தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக உடனான பேச்சுவார்த்தை குறித்து, மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத்துடன், தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும், இட பங்கீடு பேச்சுவார்த்தை குறித்தும் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து, ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,‘‘தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைமை பார்வையாளராக காங்கிரஸ் மேலிடம் என்னை நியமித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை சென்று காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இதன் பின்னர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவேன்’’ என்றார்.

Related Stories: