கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு

சென்னை: கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதம் ஆக உயர்த்தி வழங்கி கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 170க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க கோ ஆப்டெக்ஸ் பொது மேலாளர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மண்டல மேலாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கோஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 14 சதவீதம் ஆக அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே, 17 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 31 சதவீதமாக அகவிலைப்படி உயர்தத்ப்பட்டுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், ‘‘கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம், குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை அகவிலைப்படி உயருகிறது’’

Related Stories: