தேனி ஜிஹெச் நர்ஸ்கள் சினிமா பாடலுக்கு நடனம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின்போது சினிமா பாடலுக்கு நர்ஸ்கள் ஒன்றாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நர்ஸ் கண்காணிப்பாளர், ஆண் நர்ஸ், பெண் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர் என 5 பேர், சமூக இடைவெளியின்றி கைகோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரித்தபோது, நர்ஸ் கண்காணிப்பாளர் அறையில் அவ்வப்போது இவ்வாறு நடனம் ஆடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து நர்ஸ் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘‘உடன் பணிபுரிந்த பணியாளர் ஒருவருக்கு பிறந்தநாளை கொண்டாடினோம். அலுவலகத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்களை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: