தியேட்டரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

சென்னை: நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம், ‘குட்லக் சகி’. கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு நடித்துள்ளனர். துப்பாக்கி சுடும் வீராங்கனை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக டிசம்பர் 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், அப்போதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வரும் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: