பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து ஹரிநாடார் திடீர் நீக்கம்

நெல்லை: பனங்காட்டுப்படை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நடிகை விஜயலெட்சுமியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து ஹரி நாடார் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: