போடி-போடிமெட்டு மலைச்சாலையில் வடிகால் அமைக்க கோரிக்கை

போடி : போடி-போடிமெட்டு மலைச்சாலையில் மழைநீரை கடத்த வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் போடி அமைந்துள்ளது. போடியிலிருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழியில் 26 கிமீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லையில் போடிமெட்டு உள்ளது.

போடி-போடிமெட்டு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இவற்றில் 13, 14, 15 ஆகிய கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் சாலையோரத்தில் வடிவால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக சாலையின் நடுவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியபடி உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இப்பகுதியில் சாலையோரத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேகாரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: