கெந்தளா பகுதியில் சாலையில் தார் ஊற்றாமல் பேட்ஜ் ஒர்க் செய்வதால் விபத்து அபாயம்

குன்னூர் : கெந்தளா பகுதியில் உள்ள பழுதடைந்த சாலையில் தார் ஊற்றாமல் பேட்ஜ் ஒர்க் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.குன்னூர் அருகே கெந்தளா பகுதியில் இருந்து காட்டேரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தண்ணீர் ஓடி சேதமடைந்த சாலையில் ஆங்காங்கே பேட்ஜ் வர்க் மட்டுமே தற்போது செய்து வருகின்றனர். கெந்தளா முதல் காட்டேரி வரை கிட்டத்தட்ட 8 கிமீ., தொலைவில் சிறிய அளவுகளில் பேட்ஜ் வர்க் மட்டுமே செய்து வருகின்றனர்.

சாலையின் நடுவே இதுபோன்று பேட்ஜ் வர்க் செய்வதன் காரணமாக சாலை பள்ளம் மேடாக மாறுகிறது. அது மட்டுமின்றி சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கெந்தளா முதல் காட்டேரி வரை சாலையில் ஆய்வுகள் செய்து அனைத்து இடங்களிலும் பேட்ஜ் வர்க் மட்டுமே செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘காட்டேரி முதல் கெந்தளா வரை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தார் ஊற்றுவதாக கூறி ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்து வருகின்றனர். இந்த சாலை எவ்விதமான சேதமும் இல்லாமல் வாகனங்களில் பயணிக்க நன்றாகவே இருந்தது. ஆனால் தற்போது ஆங்காங்கே பேட்ஜ் வர்க் செய்வதால் சாலை மேடும் பள்ளமுமாக மாறியுள்ளது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதிகாரிகள் சாலையில் தார் ஊற்றினால் முழுவதுமாக ஊற்ற வேண்டும் இல்லையெனில் இது போன்று பேட்ஜ் வர்க் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: