கடையம் மெயின் ரோட்டில் குழாய் உடைப்பால் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கடையம்: கடையத்திலிருந்து அம்பை செல்லும் சாலையில் ஐயம்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளத்திற்கு எதிர்புறம் சாலையை யொட்டி தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளுக்கு குழாய் மூலம் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் ஐயம்பிள்ளை குளத்திற்கு எதிர்புறம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்கிறது. இந்த உடைப்பால் அதில் பெரிய பள்ளம் உருவானது. பள்ளம் இருப்பது தெரியாமல் இதில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். நேற்று ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது சாலையின் அருகே சென்றபோது அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.

இதனை கண்ட ரவணசமுத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முகமது சலீம் மற்றும் புகாரி மீராசாஹிப், கடையம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் மேலும் விபத்து ஏற்படாமலிருக்க பள்ளத்தில் ஒரு குச்சியில் துணியைக்கட்டி பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் உடைப்பை சரி செய்து பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: