கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13,551 பேர் குணமடைந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 23,443 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13,551 பேர் குணமடைந்த நிலையில் நேற்று 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 6ம் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி 16ம் தேதி 23,975 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 500க்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து 23,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் நேற்று  1,40,268 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23,443 பேருக்கு  தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 1,52,348 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13,551 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27,74,009 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்தனர்.

அதன்படி இதுவரை 37,009 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 8,591 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அரியலூர் 86, செங்கல்பட்டு 2,236, கோவை 2,042,  கடலூர் 257, தருமபுரி 158, திண்டுக்கல் 52, ஈரோடு 613, கள்ளக்குறிச்சி 112, காஞ்சிபுரம் 766, கன்னியாகுமரி 831, கரூர் 132,கிருஷ்ணகிரி 298, மதுரை 640, மயிலாடுதுறை 65, நாகப்பட்டினம் 71, நாமக்கல் 290, நீலகிரி 235, பெரம்பலூர் 42, புதுக்கோட்டை 79, ராமநாதபுரம் 91, ராணிப்பேட்டை 307,  சேலம் 466, சிவகங்கை 76, தென்காசி 202, தஞ்சாவூர் 409, தேனி 331, திருப்பத்தூர் 194, திருவள்ளூர் 1,018, திருவண்ணாமலை 231, திருவாரூர் 151, தூத்துக்குடி 229, நெல்லை 331, திருப்பூர் 605, திருச்சி 495, வேலூர் 269, விழுப்புரம் 129, விருதுநகர் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப்போன்று தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றினால் 241 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாதிப்பு குறைவு

16ம் தேதி 23,975 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 500க்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து 23,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

Related Stories: