நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம்!: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். காவல்துறை கட்டுப்பாட்டில் மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது.

Related Stories: