கொரோனா விதிகளை மீறியதால் தமிழகம் முழுவதும் ₹3.45 கோடி அபராதம் வசூலிப்பு

சென்னை : கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 6ம்தேதி  முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது போலீசார் அபராதம், வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை மீறிய நபர்களிடம் கடந்த 7ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றியதாக 1 லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 1,910 நபர்கள் மீதும், 1,552 இடங்களில் தேவையின்றி கூடியதாக வழக்கு பதிவு ெசய்து அபராதமாக ₹3.45 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் மட்டும் முகக்கவசம் அணியாதவர் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதாக 43 ஆயிரத்து 417 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ₹86 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக வடக்கு மண்டத்தில் 40 ஆயிரத்து 148 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ₹83 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: