‘கொரோனா’ அறிகுறியில் உயிரிழந்த 3 பேர் உடல்கள் அடக்கம்: தன்னார்வலர்கள் ஏற்பாடு

நெல்லை: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த 3 பேர் கொரோனா விதிமுறைகள் படி அடக்கம் செய்யப்பட்டனர். பாளை. கேடிசி நகர் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுபோல் தேவர்குளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 54 வயது நபர் விபத்து காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து உயிரிழந்த 3 பேர் உடல்களை அடக்கம் செய்ய அவர்களது உறவினர்கள் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர்  கோட்டூர் பீர் மஸ்தானிடம் கேட்டுக் கொண்டனர். அவரது ஏற்பாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னார்வ மீட்பு குழுவினர் கொரேனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து அடக்கம் செய்தனர். இக்குழுவினர் முதல் மற்றும் 2ம்  அலையின் போது கொரோனா அறிகுறியில் உயிரிழந்த 160 பேர் உடல்களை அடக்கம்  மற்றும் தகனம் செய்தனர்.

Related Stories: