புதுச்சேரியில் 7 மாதத்துக்கு பிறகு ஒரு நாள் பாதிப்பு 1000த்தை தாண்டியது: தலைமை செயலருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 4,187 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 956, காரைக்கால்- 126, ஏனாம்- 7, மாகே- 18 என மொத்தம் 1,107 (26.44 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,270 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 6,118 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வினிகுமாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இருப்பினும் அவர் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: