முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது: ஒன்றிய அரசின் காப்பிட்டு திட்டத்தை ஒருங்கிணைத்து ரூ.1,20,000 ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினரின், குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவரும் மருத்துவ பயன்பெறும் வகையில்  இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விரிவாக்கம்  செய்யப்பட்ட இந்த திட்டம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையே இந்த புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.37 கோடி குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். புதிதாக இந்த திட்டத்தில் இணைவோர் உடனடியாக சம்பத்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ பயன் கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக 7-ம் தேதி மே மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31,145 பேருக்கு, 382.05 கோடி அளவுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர். அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடங்கும்  என்று அறிவிக்கப்பட்டு, 32,23,064 பேருக்கு ரூ.182. 64 கோடி செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட்டுள்ளது.

மேலும் அண்மையில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நேரத்தில் தமிழக முதல்வர் அதற்கும் ஆணையிட்டார், இதன் மூலம் 2,049 பேருக்கு 5.83 கோடி செலவில் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: