விமான நிலையம் அருகே டயர், பிளாஸ்டிக் எரிக்க வேண்டாம்: ஆணையரகம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலைய ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடந்த 2018ம் ஆண்டு போகி பண்டிகையின்போது, பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை எரித்ததால் கடும் புகை சூழ்ந்து, 118 விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக விமானநிலைய ஆணையரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அதற்கு பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் போகிப் பண்டிகையின்போது சென்னை விமான நிலைய சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக புகை ஏற்படுத்தும் டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம். விமான சேவைக்கும் விமான பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

Related Stories: