இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக உயர்வு : ஒன்றிய சுகாதாரத்துறை

புதுடெல்லி:  இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’, குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் ெதாற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1216 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்:

டெல்லி 513

கேரளா  333

தெலங்கானா 123

குஜராத் 236

ராஜஸ்தான் 529

தமிழகம் 45

கர்நாடகா  441

தமிழ்நாடு 185

ஆந்திர பிரதேசம் 28

மத்தியப் பிரதேசம் 10

மேற்கு வங்கம் 27

ஹரியானா 123

ஒடிஷா 74

ஜம்மு காஷ்மீர் 3

உத்தரப்பிரதேசம் 113

சண்டிகர் 3

லடாக் 1

உத்தரகாண்ட் 8

ஹிமாச்சல் பிரதேசம் 1

மணிப்பூர் -1,

கோவா -19

மேகாலயா 4

பஞ்சாப் -27

அசாம் 9

அந்தமான் 3

சட்டிஸ்கர் 1

புதுச்சேரி 2

மணிப்பூர் 1

ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: