காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம்: இந்தியாவில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோயை 2025ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, அரசு செயலாற்றுகிறது. இதையொட்டி, கலெக்டர் ஆர்த்தி தலைமையில் 72வது காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழா நடந்தது. வில்லைகளை கலெக்டர் வெளியிட, துணை இயக்குநர்  மருத்துவ பணிகள் (காசம்) காளீஸ்வரி பெற்று  கொண்டார்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, காசநோய் தடுப்பு திட்ட ஆராய்ச்சி, மருந்துகள்,  இதர மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதல் நிதி ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள காச நோயாளிகளுக்கு நிதி உதவி செய்வதற்கும், காசநோய் வில்லைகளின் விற்பனை தொகை பயன்படுத்தப்படுகிறது.எனவே பொதுமக்கள் காசநோயை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.

Related Stories: