தனுஷின் ஹாலிவுட் படம் ஓடிடியில் ரிலீசாகிறது

சென்னை: தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படம், ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டில் ருஸ்ஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படுபவர்கள் டைரக்டர்கள் ஜாய், ஆண்டனி ருஸ்ஸோ. அவேஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவேஞ்சர்ஸ் எண்ட்கேம் படங்களை இயக்கி, உலக அளவில் புகழ்பெற்ற இயக்குனர்கள். இவர்கள் இயக்கி வரும் புதிய படம் தி கிரே மேன். இந்த படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக தனுஷ் நடிக்கிறார்.

அவர் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இதுதான். மேலும் கிரிஸ் ஈவன்ஸ், ரியான் காஸ்லிங், ஜெசிகா ஹென்விக் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை மாதம் படம் ரிலீசாக உள்ளது. இதற்கு முன் எக்ஸ்ட்ரார்டினர் ஜர்னி ஆப் ஃபகீர் என்ற பிரெஞ்சு படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

Related Stories: