குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய்; திமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது: ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆரம்பத்தில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 10 லிட்டரும், சென்னையில் 12 லிட்டரும், கிராமப்புறங்களில் 5 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. சில வருடங்களுக்கு முன்னர் இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் திட்டத்தின் கீழ், காஸ் வாங்கியவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கும், ஒரு காஸ் வைத்திருப்பவர்களுக்கும் ஒரு லிட்டர், அரை லிட்டர் என்றும், 2 காஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய்  கிடையாது என்று உள்ளது.மண்ணெண்ணெய் அளவை அதிகரிக்க வேண்டும். விலையை குறைக்க வேண்டும் என்று பேசினார். அமைச்சர் சக்கரபாணி: காஸ் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு இப்போது 3 லிட்டரும், ஒரு காஸ் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிட்டரும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் மண்ணெண்ெணய்  ரூ.15 முதல் அதிகப்பட்சமாக ரூ.16.50 வரை  வினியோகிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மண்ணெண்ணெயை  ரூ.44.27க்கு விலை கொடுத்து மாநில அரசு பெறுகிறது. ஏற்கனவே, மாநில அரசால்  அதிக மானியம் கொடுத்து மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால், மேலும் விலையை குறைக்கும்  நிலை எழாது. ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இன்னும் கூடுதலாக, மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: