சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை 3-ஆக பிரிக்கும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை 3-ஆக பிரிக்கும் மசோதாவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் புதிய ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டது.

மேலும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் வகையில் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  மசோதாவை தாக்கல் செய்தார். சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 5ல் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்படுகிறது. புதிய மசோதாவால் 2018-ல் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் இந்த ஆண்டே முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: