பொங்கல் பண்டிகையையொட்டி வடசேரியில் குவிந்துள்ள பனங்கிழங்கு

நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு வடசேரிக்கு பனங்கிழங்கு வந்துள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையின்போது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காலையில் பொங்கல் போட்டு வணங்குவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையின்போது பொங்கல்போடுவது விளைநிலங்களில் விளைபொருட்கள் விளைவதற்கு உதவிய இயற்கைக்கு நன்றி கடன் ெசலுத்துவதே இதன்நோக்கம் ஆகும்.

பொங்கல் இடும்போது, மஞ்சள், கரும்பு, பழம், பனங்கிழங்கு, மற்றும் காய்கறிகள் வைத்து படைப்பார்கள். பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பனங்கிழங்கு குமரிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. வடசேரி சந்தையில் பனங்கிழங்கு குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 25 எண்ணம் கொண்ட பனங்கிழங்கு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பனங்கிழங்கை மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது பனையில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, கருப்புகட்டி உள்ளிட்ட பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பல பகுதிகளில் பனங்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது.

wஇது போல் பொங்கலுக்கு இறைவனைக்கு படைக்கும் அனைத்து வகை கிழங்குகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

Related Stories: