கரூர் மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் ஒருங்கிணைந்த நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வார்டு பகுதிகளில் நகரப்பகுதிகளை தாண்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு சுற்றித்திரியும் தெரு நாய்களின் அட்டகாசம் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதியை சந்தித்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் வேலை முடிந்து நடந்து செல்லும் பொதுமக்கள் நாய்களின் தொந்தரவு காரணமாக மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்கள் மட்டுமே இவை நடைமுறையில் இருந்தது. அதற்குப்பிறகு இந்த முறை பின்பற்றாத காரணத்தினால் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: