காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடைவிடாமல் பணியாற்றுவோம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எழுதியுள்ள கடிதத்தில்; 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது. தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடைவிடாமல் பணியாற்றுவோம். காவல்துறையின் சிறப்பான பணியால் தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம்.

தேவர் ஜெயந்தி, சித்திரை திருவிழா, கார்த்திகை தீபம், இமானுவேல், சேகரன் குருபூஜை அமைதியாக நடைபெற்றன. ஆபரேசன் ரவுடி வேட்டை மூலம் கடந்த ஆண்டில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதயத்தில் எந்த கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போராடுவம். கொரோனா 2வது அலையில் 139 காவலர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: