தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சி நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணைத்தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கே.எஸ்.அழகிரி புத்தாண்டு கேக்கை வெட்டி கட்சியினருக்கு வழங்கினார். பின்னர் மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு, தலா ரூ.100 ரொக்கப்பரிசு ஆகியவற்றை கே.எஸ்.அழகிரி வழங்கினார். விழாவில் விஜய் வசந்த் எம்பி, பொருளாளர் ரூபி மனோகரன், துணை தலைவர்கள் பொன்கிருஷ்ணமூர்த்தி, தாமேதரன், பொது செயலாளர் ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், டெல்லி பாபு, எம்.ஏ.முத்தழகன், அடையார் துரை, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:கடந்த 7 ஆண்டுகளில் நிர்வாக, கலாச்சாரா, பொருளாதார ரீதியாக நாட்டை பாஜ அரசு சீரழித்து விட்டது. மத்திய பாஜ ஆட்சியை மாற்றிடக்கூடிய ஆற்றல் ராகுல்காந்திக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் ஒரு விடியல் ஏற்பட்டுள்ளது. வெளிப்படையான ஆட்சி நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஏன் தனது கட்சியினராக இருந்தாலும்கூட அதை கண்டிக்கும், தேவைப்பட்டால் தண்டிக்கும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். அவரின் இந்த மனநிலை பாராட்டத்தக்கது. மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் எனும் நிலையை எட்டும் என அறிவித்தது வரவேற்கத்தக்கது. வெகுவிரைவில் அந்த வளர்ச்சியை தமிழகம் அடையும். வருகிற 7, 8, 9ம் தேதிகளில் ஏலகிரியில் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: