சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கின்றனர். யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.