பெண் சிசுக் கொலை தடுப்பதற்கு தனிக்குழு; மதுரையில் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

மதுரை: பெண் சிசுக் கொலைகளை தடுக்க தனிக்குழு அமைக்கப்படுமென அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். மதுரை கே.கே.நகரில், தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ், மண்டல துணை இயக்குநர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் மூலம், தென்மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் பிரச்னைகள் ெதாடர்பான புகார்கள் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக நிறைய புகார்கள் வருகிறது. அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

உசிலம்பட்டியில் சமீபத்தில் நடந்த பெண் சிசுக்கொலை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாரபட்சம் பார்க்கக்கூடாது. உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனிக்கவனம் எடுத்து விசாரணை நடத்தப்படும். பெண் சிசுக்கொலைகள் அதிகம் பதிவாகியுள்ள உசிலம்பட்டி பகுதியில் இனி சிசுக்கொலைகளை தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து தனிக்குழு அமைத்து விழிப்புணர்வு செய்து கண்காணிக்கப்படும்’’’ என்றார்.

Related Stories: