கந்தர்வகோட்டையில் மண்பாண்ட தொழில் ஊக்குவிக்கப்படுமா?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

கந்தர்வகோட்டை : மண்பாண்ட தொழிலை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மெய்குடிப்பட்டி கிராமத்தில் வேளார் இன மக்கள் மண்ணினால் ஆன அடுப்பு, கொடி அடுப்பு, சிலரது வேண்டுதலுக்கு ஏற்ப மண்ணாலான மாடு பொம்மைகள், நாககன்னி பொம்மைகள், பெரிய நிறுவனங்களில் வரவேற்பறையில் மண்ணாலான பொம்மைகள் வைக்கவும் மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள்.

தற்சமயம் தைப்பொங்கலுக்கு பொங்கல் வைக்க மண் அடுப்புகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அடுப்புகளை நன்றாக வெயிலில் காய வைத்து சூளையில் வைத்து சுட்டு, விற்பனைக்கு தயார் செய்து வருகிறார்கள். பின்னர் இதனை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

சைக்கு தகுந்தார்போல் விற்கின்றனர்.இதுகுறித்து மண் அடுப்பு தொழில் செய்துவரும் மெய் குடிபட்டி செல்வராஜ் கூறுகையில்,``நாங்கள் பல தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறோம். தற்சமயம் பெய்த மழையில் சூளை கரைந்து விட்டது, புதிய சூளை கட்ட வேண்டும். எங்களுக்கு தேவையான மண்ணை கீரனூர் அருகே வீரக்குடியில் இருந்து வாங்கி வருகிறோம். தைப்பொங்கலுக்கு நெசவாளர்களின் வாழ்வு சிறக்க அவர்களிடமிருந்து வேஷ்டி, சேவைகளை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவது போல், எங்களது வாழ்வாதாரம் சிறக்க ஆண்டுக்கு ஒரு முறையாவது தைத்திருநாள் அன்று மண்ணினால் ஆன அடுப்புகளை அனைந்து குடும்பங்களுக்கும் இலவசமாக கொடுத்தால் நமது கலாசாரம் காக்கப்படும். மேலும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தண்ணீர் வைக்க மண்பானைகளை பயன்படுத்த வேண்டும்.

எங்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் சிறு வணிக கடன் வழங்கி தொழில் சிறக்க வழிவகை செய்து தர வேண்டும். தற்சமயம் இளைஞர்களுக்கு இந்தத் தொழில் ஈடுபாடு இல்லாமல் உள்ளதால் கல்வி நிறுவனங்களிலேயே கைத்தொழில் பாடப்பிரிவில் மண்பாண்டம் செய்யும் தொழிலையும் ஊக்குவிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: