மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை மூன்று ஆண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடந்து வருகின்றது.

விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் 13 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-600004. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.01.2022. இந்த சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலையில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: