ஆசிரியர் பணி ஓய்வு- தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு

சென்னை: கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் தேவையில்லை என்று 2018- ல் அரசாணை வெளியிடப்பட்டது. கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்க வேண்டும் என தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.   

Related Stories: