வடிவேலுவை தொடர்ந்து இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை: கடந்த 1998ல் சரத்குமார் நடித்த ‘மூவேந்தர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், சுராஜ். இதையடுத்து ‘குங்குமபொட்டு கவுண்டர்’, ‘ மிலிட்டரி’, ‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘சகலகலா வல்லவன்’, ‘கத்தி சண்டை’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக வடிவேலு மற்றும் தயாரிப்பாளருடன் லண்டன் சென்றிருந்த சுராஜ், சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதையடுத்து அவர்கள் மூவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், வடிவேலுவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வடிவேலுவுடன் சென்றிருந்த சுராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சுராஜுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: