கொச்சியில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்....

கொச்சி: கொச்சியில் உள்ள தென்மண்டல கடற்படை தலைமையகத்தில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். கேரளாவிற்கு 3 நாள் பயணமாக வருகை தந்த அவர் கொச்சியில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். அங்கு விமானம் தாங்கி கப்பலிலிருந்து தேசிய கொடியை ஏந்தியவாறு புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பை கண்டுகளித்தார்.

கடற்படையில் இடம்பெற்றுள்ள அதிநவீன ஹெலிகாப்டர்களை கொண்டு வாகனங்களை தூக்கிச் செல்லும் சாகசத்தை குடியரசு தலைவர் பார்வையிட்டர். இயற்கை பேரிடர் காலத்தில் மீட்டுப்பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து கொச்சி கடற்படை முகாமில் உள்ள விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பெருமை பெற்றது  விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலாகும்.        

Related Stories: