திருச்செந்தூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய அம்மன் சிலை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் மீனவர் வலையில் அம்மன் சிலை சிக்கியது. திருச்செந்தூர் அமலிநகர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் விஜயன் (37). இவர். கடந்த 15ம் தேதி இரவு அமலிநகர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் விரித்த வலையில் சுமார் ஒரு அடி உயரமுள்ள மீனாட்சி அம்மன் சிலை சிக்கியது. இதையடுத்து அவர், சிலையை கடற்கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அந்த சிலை ஊர்நலக் கமிட்டி மற்றும் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து திருச்செந்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று  தாசில்தார் சாமிநாதன் அமலிநகருக்குச் சென்று சிலையை பங்குத்தந்தை ரவீந்திரன் பர்னாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்போது விஏஓ வைரமுத்து, ஊர் கமிட்டி தலைவர் பிரேம்தாஸ், துணைத்தலைவர் மங்களதாஸ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஜேசுமிக்கல், உறுப்பினர்கள் ராஜன், ஸ்டாலின், ரெக்ஸ் உடனிருந்தனர்.

Related Stories: