சாலைகள், நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே எண்ணெய் இயற்கை எரிகாற்று குழாய்களை பதிக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அந்த குழாய்களை, விவசாய நிலங்களுக்கு உள்ளே பதிக்க இருக்கிறார்கள். இதனால், விளைநிலங்களும், வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும். 30000 விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்று வரையிலும் செயல்படுத்த முடியவில்லை. விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, 2013ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர், கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூட்டநாடு திட்டத்திற்காக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில், ஓரமாகப் பதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அவ்வாறு இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில், சாலைகளின் ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. பாதிக்கப்படுகின்ற உழவர்களின் சார்பில் கோரிக்கைகள் வைக்கிறேன்.

சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அருகில், பயன்பாட்டு தாழ்வாரங்களை உருவாக்க வேண்டும். அதை பயன்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இருகூர்-தேவனகொந்தை மற்றும் கெயில் நிறுவனத்தின் கொச்சி -கூட்டநாடு எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே பதிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: