விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்பு; சஸ்பெண்டான சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக சிபிசிஐடி, பிப்ரவரி 27ல் பதிவு செய்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ம் தேதி 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் மறுநாளே விசாரணைக்கு எடுத்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிசஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில்,  தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று  குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகார் மீதான விசாரணை தொடங்கியுள்ளதால் வழக்கை திரும்ப பெற உள்ளதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை வாபஸ் பெற  அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: