நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பதவியிடங்களாக உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆகியவற்றை விரைந்து நிரப்பிடவும், தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, கோவிட் தடுப்பு மருத்துகள் பெறுதல், விநியோகம் செய்தல் குறித்தும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி குறித்த விவரங்களை  பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்நர்களுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்காக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் இன்று (9.12.2021) தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களாலும் வெளியிடப்படும். சென்னை மாநகராட்சியை  பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More