மஞ்சள் காமாலையால் உயிருக்கு போராடும் காவலருக்கு ரத்த தானம் செய்த திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக சங்கரவேல் வேலை செய்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனே 3 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. தகவலறிந்து அண்ணா சாலையில் பணியாற்றி வரும் தமிழக காவல் துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டரான பிரித்திகா யாசினி, நேற்று காலை உடனே தலைமை காவலர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று 350 மி.லிட்டர் ரத்தத்தை கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு போலீஸ் அதிகாரிகள் கொண்டு சென்றனர். தொடர்ந்து கமிஷனர், சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினிக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: