வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

சென்னை: வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 12ஆம் தேதி வரை லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யகூடும். கடலோர மாவட்டங்கள்  மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர்,பெரம்பலூர்,மதுரை,விருதுநகர்,சிவகங்கை,தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

10, 11-ம் தேதிகளில் தென் மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 12-ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                

Related Stories:

More