விவசாயிகளின் போராட்டம் இன்று முடிவுக்கு வருகிறதா? : மதியம் 2 மணிக்கு ஆலோசனை

டெல்லி : விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர், இன்று பிற்பகலில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.டெல்லியில் ஓராண்டு கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரொலியாக ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைப்பதாகவும் உறுதி அளித்தது, இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது, விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற ஒன்றிய அரசு ஒப்பு கொண்டாலும் அந்த நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பஞ்சாப் அரசு அறிவித்ததை போன்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை போன்றவற்றை அளிப்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளன. கிட்டத்தட்ட போராட்டத்தை கைவிடும் முடிவிற்கு வந்த விவசாயிகள், ஒன்றிய அரசின் பதிலை பொறுத்தே அதன் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தினர், பிற்பகலில் ஆலோசனை மேற்கொள்ள வருகிறார்கள். விவசாயிகளின் 6 அம்ச கோரிக்கைகளில் 5க்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் லக்கிம்பூர் எல்லையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்து பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்கவில்லை. இருப்பினும் 5 கோரிக்கைகளுக்கு நம்பத்தகுந்த உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: