எஸ்.ஐ.யிடம் 1 லட்சம் திருட்டு

பூந்தமல்லி: திருவேற்காடு அபிராமி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கருணாகர பாண்டியன் (65). ஒய்வுபெற்ற உதவி ஆய்வாளர். இவர், நேற்று திருவேற்காட்டில் உள்ள வங்கியில்  இருந்து ₹1 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அங்கிருந்த தனது சைக்கிளில் பணம் வைத்திருந்த பையை மாட்டிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது, சாலையில் ₹10 மற்றும் ₹20  நோட்டுகள் சிதறி கிடந்தது. இதனால், சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, இவை யாருடையது என்று கேட்டுள்ளார். ஆனால், யாரும் பதில் சொல்லவில்லை. இதையடுத்து, சைக்கிளை எடுக்க வந்தபோது, அதில் வைத்திருந்த பணப்பை மாயமானது தெரிந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More