பரமக்குடி வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

ராமநாதபுரம்: பரமக்குடி வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 9,000 கனஅடிக்கு மேல் நீர் செல்வதால் பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது.

Related Stories: