இருக்கன்துறையில் வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

கூடங்குளம்:  கூடங்குளம் அருகே இருக்கன்துறையில் பள்ளி அருகே மெதுவாக செல்லுமாறு வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இருக்கன்துறையில் செயல்படும் குற்றாலம் நினைவுப்பள்ளி சாலைக்கு மிக அருகே உள்ளது. தற்போது மழைக்காலம்  என்றபோதும் பள்ளியின் முன்வாசல் வழியாக கல்குவாரி கனரக வாகனங்கள் அதிவேகத்துடன் செல்வதால் பள்ளியின் உள்ளே இருந்து வெளியே வரக் கூடிய மாணவர்கள்  விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

இது குறித்து  பலமுறை எச்சரித்தும் கனரக வாகன உரிமையாளர்கள்,  ஓட்டுநர்கள்  அதி வேகத்தில் செல்கின்றனர்.  எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தியதையடுத்து  பழவூர் போலீசார் சோதனை மேற்கொண்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறினார்.

Related Stories:

More