தமிழகத்தில் 731 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 731 பேருக்கு கொரோனா தொற்று      உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட    அறிக்கை:தமிழகத்தில் நேற்று 1,06,505 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 731  பேருக்கு பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டது. இதையடுத்து  பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 27,29,792 ஆனது.  

நேற்று 753 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,85,203. கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 6 பேர் நேற்று  உயிரிழந்தனர். மொத்தம் 36,519 பேர்  உயிரிழந்துள்ளனர். தற்போது  மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில்   இருப்பவர்கள் 8,070 பேர். அதிகபட்சமாக  சென்னையில் 136 பேர், கோவையில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More