தரைப்பாலங்களில் வெள்ளத்தால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு-3 இடங்களில் சிறுபாலம் அமைக்க கோரிக்கை

வந்தவாசி : வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுசாலையில் இருந்து பாதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 3 இடங்களில் சிறுபாலம் ஏற்படுத்த வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வந்தவாசி அடுத்த பாதூர், எய்பாக்கம், மணிமங்கலம், பசுவத்தான் காலனி, வெளியம்பாக்கம், அமணம்பாக்கம், அதியனூர், அதியங்கும்பம், கல்பட்டு, நைனாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு வந்தவாசியில் இருந்து கீழ்கொடுங்காலூர் கூட்டுசாலை, ெகாட்டை கிராமம் வழியாகதான் மேற்கட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

கொட்டை-அதியனூர் இடையே அதியனூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகஅளவில் செல்வதால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கபட்டது. இதனால் அதியனூர், பாதூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொட்டையில் இருந்து வெளியம்பாக்கம் செல்லும்சாலையில் அமணம்பாக்கம் கூட்டுசாலை அருகே உள்ள தரைப்பாலத்தில் கீழ்பகுதியில் வெள்ளநீர் முழுவதும் செல்லமுடியாமல் தரைப்பாலத்தின் மீது செல்வதால் இப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் வெளியம்பாக்கம், அமணம்பாக்கம், எய்பாக்கம், நைனாங்குப்பம், குறிப்பேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதியனூர் கிராமத்தில் இருந்து பாதூர் செல்லும் வழியில் அதியனூர் ஏரியின் உபரிநீர் செல்லும் மற்பெறு பகுதி உள்ளதால் இங்குள்ள தரைபாலத்தின் மீது செல்வதால் இரு சக்கரவாகனத்தில் செல்பவர்கள் கூட அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதனால் இந்த கிராமங்கள் தீவு போல் மாறியுள்ளது. பாதூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் பலத்த மழை பெய்தாேல தரைப்பாலத்தில்  தண்ணீர் அதிகஅளவில் செல்லும்.

எனவே, வெளிம்பாக்கம் சாலை, அதியனூர், பாதூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள தரைப்பாலத்தை சிறு பாலமாக உயர்த்தி கட்டினாலே போக்குவரத்துக்கு ஏதுவாக இருப்பதுடன் போக்குவரத்து தடையின்றி செல்ல உதவியாக இருக்கும். மழைகாலத்தில் இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமமக்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கும், கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல், அவசர தேவைக்காக மருத்துவமனைகளுக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகிவருகின்றனர். 3 இடங்களிலும் சிறு பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More