வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 90 அணைகளில் நீர் இருப்பு 206.3 டிஎம்சியாக உயர்வு: 16 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது

ெசன்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் 206.38 டிஎம்சியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. 92.01 சதவீதம் உள்ளது.

குறிப்பாக, 120 அடி கொண்ட மேட்டூர் அணை 120 அடியாகவும், 22 அடி கொண்ட தூணக்கடவு அணை 21.99 அடியாகவும், 71 அடி கொண்ட பரம்பிகுளம் அணை 71.02 அடியாகவும், 90 அடி கொண்ட அமராவதி அணையில் 88 அடியாகவும், 60 அடி கொள்ள்ளவு கொண்ட திருப்பூர் அணையில் 55.73 அடியாகவும், 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 14 அடியாகவும், 66.47 அடி கொள்ளளவு கொண்ட வர்தமாநதி அணையில் 66.47 அடியாகவும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 118.30 அடியாகவும், 160 அடி கொண்ட சோலையாறு அணையில் 160 அடியாகவும், 142 அடி கொண்ட முல்லை பெரியாறு அணையில் 141.65 அடியாகவும், 32.81 அடி கொண்ட சாஸ்தா கோவில் அணையில் 28.78 அடியாகவும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் 72.84 அடியாகவும், 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையில் 43.40 அடியாகவும், 36.61 அடி கொண்ட தேர்வாய் கண்டிகை 36.61 அடியாக உள்ளது. தற்போது வரை 16 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து இருப்பதால் மேலும் பல அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

Related Stories: