கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு: நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு..!

கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், கே ஜி சாவடி காவல் நிலைய சரகம், இன்று 26 -11 -2021 ஆம் தேதி 21.0 5 மணிக்கு மதுக்கரை வனச்சரகம் கே ஜி சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை அருகில் மங்களூர் to சென்னை செல்லும் ரயில் நம்பர் 12602 சென்று கொண்டிருந்தது.  

அப்போது, போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் 2 பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி சம்பவ இடத்தில் மூன்று யானைகளும் இறந்து விட்டது. ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: