சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய பலத்த மழை

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதியில் 3.1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 29ம் தேதி வரை தொடர் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலை முதலே மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. இரவு முதல் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேனி, தாம்பரம், அடையாறு, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை இடைவெளி விட்டு பெய்தது. நேற்று நண்பகல் முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   

Related Stories: