ஆழ்கடலில் நீந்திய நடிகை பூஜா ஹெக்டே

சென்னை: இந்தி மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றார். அங்குள்ள கடற்பகுதியில் பிகினி டிரெஸ்சில் போஸ் கொடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பரவசம் அடைந்து பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆழ்கடலில் பல வகை மீன்களுடன் நீந்தி சாகசம் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே, ‘நீமோ மீனை கண்டுபிடித்து விட்டேன். அவனும், அவனது நண்பனும் மிகவும் அழகாக இருக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: