கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கமல்ஹாசன் குணமடைய இளையராஜா டிவிட்

சென்னை: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று தனது டிவிட்டரில், ‘நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க வேண்டும், வாருங்கள் சீக்கிரம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: